கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.கோவை சவுரிபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் மணிவேல்ராஜ் (வயது 40). மாநகராட்சி துப்புரவு தொழிலாளி. இவருக்கும் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (40) என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளக்காதலியை சவுரிபாளையத்திற்கு அழைத்து வந்து மணிவேல்ராஜ் 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார்.
↧